பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் எண்ணெய் வித்துக்களை வைத்து வாகை மரத்தினால் ஆன செக்கை கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெய்களை நம் உணவில் சேர்த்து, இயற்கை வழியில் ஆரோக்கியமன வாழ்வை வாழ்ந்து வந்தார்கள். ஆனால், தற்போது நம் முன்னோர்களின் வாழ்வியல் முறையான "உணவே மருந்து" என்ற இயல்பை சில கலாச்சார மாற்றங்களின் காரணத்தினால் விஷமே உணவாக உட்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலை மாற வேண்டும். மாற்ற(ம்) வேண்டும் என்ற உயரிய நோக்குடன் நம் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஓர் முயற்சியாக 2016 - ஆம் ஆண்டு உடுமலையில் தொடங்கப்பட்ட ஓர் இயற்கை வழி நிறுவனம்.
சேவை நோக்கு
முதல் தரமான தேர்ந்தெடுக்கப்பட்ட, கலப்படம் இல்லா மருத்துவ குணம் கொண்ட எண்ணெய்களை சுகாதார முறையில் தயாரித்தல்.